25ஆம் ஆண்டு கார்கில் போர் வெற்றி தினம்..! வீரவணக்கம் செலுத்துகிறார் பிரதமர் மோடி..!
ஜூலை 26-ம் தேதியான இன்று, கார்கில் விஜய் திவாஸ் தினத்தை இந்தியா கொண்டாடுகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் கார்கில் பகுதியில் 1999 ஆண்டு பாகிஸ்தான் ஊடுருவ முயற்சித்தது, இதனை இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்தனர். இதனை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறத.
ஒவ்வொரு ஆண்டும் போரில் வெற்றிகரமான மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்காக போராடிய வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 25ஆம் ஆண்டு கார்கில் போர் வெற்றி தினம் ஆகும். இதனையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.
25ஆம் ஆண்டு கார்கில் போர் வெற்றி தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்றைய தினம் கார்கில் செல்கிறார். கார்கில் செல்லும் பிரதமர் மோடி, போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறார். மேலும் கார்கில் பயணத்தின் ஒரு பகுதியாக, ஷிங்குன் லா சுரங்கப்பாதை திட்டத்தை பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்.
4.1 கிமீ நீளமுள்ள ஷிங்குன் லா சுரங்கப்பாதை திட்டமானது மலைப்பகுதியில் சுமார் 15,800 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது. மேலும் இது இரட்டைக் குழாய் சுரங்கப்பாதையாக அமைக்கப்படுகிறது. இது உலகின் மிக உயரத்தில் கட்டப்படும் சுரங்கப்பாதையாகும்.
Read More: ஷாக்!. பசி, பட்டினியால் வாடும் மக்கள்!. உலகில் 73.3 கோடி மக்களுக்கு உணவு கிடைக்காத சோகம்!
உங்கள் வாட்ஸ்அப் சேனல்களில் நிர்வாகிகளை எவ்வாறு சேர்ப்பது?. எளிதான வழிமுறை!.