தூள்..! தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம்... மிஸ் பண்ணிடாதீங்க...!
தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் ரூ.15 லட்சம் வரை வழங்கப்படும்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949-ம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது. இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டு இருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதர்க்கும். உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
மறைமலை நகர் கிளை அலுவலகத்தில் (HIG No 42 & 43, முதல் தளம், MGR சாலை, மறைமலை நகர், சென்னை-603 209) குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா 06.09.2024 வரை நடைபெறுகிறது. இச்சிறப்பு தொழில் கடன் மேளாவில் டி.ஐ.ஐ.சி -ன் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.
தகுதி பெரும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் ரூ.150.00 லட்சம் வரை வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு செயலாக்கக் கட்டணத்தில் 50% சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் / தொழில் அதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 7845529657, 9600130247, 9445023494.