முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

25.55 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

11:43 AM Mar 29, 2024 IST | Chella
Advertisement

2023 இந்திய காசநோய் அறிக்கையின் படி, கடந்தாண்டு 25.55 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

Advertisement

இந்தியாவில் காசநோய் என்பது கி.மு. 1500 இருந்து இருப்பதாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன. இந்த நோயை ஒழிப்பதற்கான 'தேசியக் காசநோய் ஒழிப்பு' திட்டம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இருப்பினும், ஒரு காலத்தில் ஏழைகளின் நோய் என்று அறியப்பட்ட காசநோய், தற்போது அனைவரையும் பாதித்து வருகிறது.

இந்நிலையில், கடந்தாண்டு 25.55 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த அறிக்கையில், ”கடந்தாண்டு இந்தியாவில் 25.55 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 1960-ஆம் ஆண்டுகளில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், முதல் முறையாக 25.55 லட்சம் பேருக்கு மேல் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

25.5 லட்சம் பேரில் 8.4 லட்சத்துக்கும் அதிகமானோர் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தனியார் மருத்துவமனைகள் மூலம் தெரியவந்தது. காசநோயால் உயிரிழப்போரின் விகிதம் 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது 18 சதவீதம் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ரூ.921 கோடிக்கு சொத்து..!! தாயாரின் புடவை மட்டுமே ரூ.2 கோடி..!! சுயேட்சையின் வேட்புமனு தள்ளுபடி..!! என்ன காரணம்..?

Advertisement
Next Article