For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

CANADA | 24 வயது இந்திய மாணவர் சுட்டுக்கொலை.!! காரில் நடந்தேறிய கொடூரம்.!! குடும்பத்தார் உருக்கமான வேண்டுகோள்.!!

02:09 PM Apr 14, 2024 IST | Mohisha
canada   24 வயது இந்திய மாணவர் சுட்டுக்கொலை    காரில் நடந்தேறிய கொடூரம்    குடும்பத்தார் உருக்கமான வேண்டுகோள்
Advertisement

CANADA: கனடா நாட்டின் வான்கூவர் நகரில் இந்தியாவைச் சேர்ந்த 24 வயதான சிராக் ஆன்டில் என்ற மாணவர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு வான்கூவர் நகரின் தெற்கு பகுதியில் காரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக வான்கூவர் காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

சுட்டு கொலை செய்யப்பட்ட சிராக்கின் உடலை அடக்கம் செய்வதற்கு இந்தியா கொண்டு வருவதற்காக GoFundMe பிரச்சாரத்தை அவரது குடும்பத்தினர் தொடங்கி இருக்கின்றனர். சிராக்கின் படுகொலை குறித்து கனடா(CANADA) ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவரின் சகோதரர் ரோமித் "சிராக்கை எதிரிகள் இல்லாத மென்மையான உள்ளம் என்று விவரித்தார். "எனது சகோதரனும் நானும் மிகவும் நெருக்கமாக இருந்தோம். அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தார், யாருடனும் எந்த முரண்பாடுகளும் இருந்ததில்லை" என தெரிவித்து இருக்கிறார்.

சமீபத்தில் கனடா வெஸ்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்து ஒர்க் பெர்மிட் அனுமதி பெற்ற சிராக் வார நாட்களில் நீண்ட வேலைக்குப் பிறகு விடுமுறையை கொண்டாடுவதற்காக உற்சாகமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது துரதிஷ்டவசமாக அவரது காரில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்டார். உள்ளூர் ஊடக அறிக்கையின் படி " கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் மெத்தனம் காட்டி வருவதாக சிராக்கின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

அவரது வழக்கு விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லாததாகவும் மேலும் கொலை குறித்த சாட்சிகள் எதுவும் இல்லாததால் மிகவும் வேதனை அடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ரோமித் மற்றும் அவரது குடும்பத்தினர் சிராக்கின் உடலை இந்தியாவிற்கு எடுத்துச் சென்று சம்பிரதாய முறைப்படி அடக்கம் செய்வதையே விரும்புவதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவரது உடலை விரைவாக இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல உதவுமாறு கனடா அரசை வலியுறுத்துவதாக ரோமித் தெரிவித்துள்ளார்.

Read More: மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளின் புகைப்படங்கள் வெளியீடு!

Tags :
Advertisement