For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வேலைக்கு சென்று திரும்பிய 23 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.! மர்ம கும்பலுக்கு வலைவீச்சு.!

12:08 PM Dec 04, 2023 IST | 1newsnationuser4
வேலைக்கு சென்று திரும்பிய 23 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்   மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
Advertisement

டெல்லி அருகே 23 வயது இளம் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள ட்ரோனிகா நகரில் அமைந்துள்ள விளையாட்டு சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். சம்பவம் நடந்த தினத்தன்று தன்னுடன் வேலை பார்க்கும் ஆண் நண்பர் மற்றும் தோழியுடன் வீட்டுக்கு திரும்பி இருக்கிறார்.

அப்போது கான்பூர் ரோடு பகுதியில் இவர்களை சுற்றி வளைத்த கும்பல் அந்த 22 வயது இளம் பெண்ணை தூக்கிச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறது. பின்னர் அந்த அடையாளம் தெரியாத கும்பல் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளது. இது தொடர்பாக இளம் பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

மேலும் அந்த இளம் பெண்ணுடன் பணிபுரிபவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறுவதால் காவல்துறைக்கு குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. எனினும் அந்தப் பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இளம் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement