For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

திருமணம் செய்ய மறுப்பு.! 23 வயதை இளைஞர் எரித்து கொலையா.? காவல்துறை விசாரணை.!

08:30 PM Jan 07, 2024 IST | 1newsnationuser7
திருமணம் செய்ய மறுப்பு   23 வயதை இளைஞர் எரித்து கொலையா   காவல்துறை விசாரணை
Advertisement

தலைநகர் டெல்லியில் 23 வயது இளைஞர் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். வடமேற்கு டெல்லியின் வசீராபாத் பகுதியைச் சேர்ந்தவர் நௌமன். 23 வயதான இவர் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார்.

Advertisement

இந்நிலையில் இளைஞர் ஒருவர் தீக்காயம் அடைந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உயிருக்கு போராடிய இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில் இதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை விரும்பியதாகவும் அவரிடம் திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் திருமணத்திற்கு மறுத்த அந்த பெண் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்ததாகவும் காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார் அந்த இளைஞர். இதன் பிறகு ஓரிரு நாட்களில் தீக்காயத்தின் தீவிரத்தால் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை அழைத்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறையிடம் தெரிவித்திருக்கும் அந்தப் பெண்" நான் அந்த இளைஞரின் திருமண கோரிக்கையை நிராகரித்தது உண்மைதான் என தெரிவித்துள்ளார். மேலும் அந்த இளைஞர் மண்ணெண்ணெய் கொண்டு வந்து அதனை அவர் மீது ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார். தனக்கும் அந்த இளைஞரின் இறப்பிற்கும் சம்பந்தம் இல்லை எனவும் காவல்துறையிடம் முறையிட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Advertisement