பெரும் சோகம்...! எத்தியோப்பியா நிலச்சரிவு... பலி எண்ணிக்கை அதிகரிப்பு...! மீட்பு பணி தீவிரம்...!
தெற்கு எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 229 பேர் உயிரிழந்துள்ளனர். எத்தியோப்பியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. திங்களன்று கென்சோ ஷாசா கோஸ்டி மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. ஏராளமானவர்கள் மண்ணில் புதைந்தனர். தகவல் அறிந்த மீட்பு குழுவினர் அங்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
உள்ளூர் தகவல் தொடர்பு விவகாரத் துறையின் அறிக்கையின்படி, திங்களன்று கோஃபா மண்டலத்தில் உள்ள கெஞ்சோ-ஷாச்சா பகுதியில் ஏற்பட்ட பேரழிவின் பின்னர் 148 ஆண்களும் 81 பெண்களும் இறந்துள்ளனர். சேற்றில் இருந்து 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக எத்தியோப்பிய அரசு தெரிவித்தது.
எத்தியோப்பியன் பேரிடர் இடர் மேலாண்மை ஆணையத்தின் (EDRMC) முன் எச்சரிக்கை இயக்குநர் கூறியதாவது; ஆரம்பத்தில், நான்கு வீடுகள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டதாகவும், பின்னர், அப்பகுதியில் உள்ள குடும்பங்கள் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக மற்றவர்கள் சென்று நிலச்சரிவில் சிக்கியதாக கூறினார் . தொடர்ந்து மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளாக நேற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்தது.மண்ணில் புதைந்து பலியான பலர் சடலமாக மீட்கப்பட்டனர்.