முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

22,700 சதுர அடி நிலம்..! 20ஆண்டுகால சட்டப்போராட்டம்…! வெற்றிபெற்ற கவுண்டமணி..!

01:53 PM Mar 15, 2024 IST | 1Newsnation_Admin
Advertisement

Goundamani : 90களில் காமெடி கிங்காகவும், இன்றும் அனைவரின் நினைவிலும் நிற்பவர் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. அப்போதே கவுண்ட்டருக்கு பெயர் போன நடிகரென்றால் அது கவுண்டமணி என்றே கூறலாம். ஹீரோவுக்காக படம் ஓடிய காலம் போய் கவுண்டமணிக்காக பல படங்கள் ஓடியுள்ளதாம். அப்போதே ஹீரோக்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் கவுண்டமணி.

Advertisement

இந்நிலையில் தற்போது கவுண்டமணி 20ஆண்டுகால சட்டபாராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். நடிகர் கவுண்டமணி 1996ஆம் ஆண்டு கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவரையும் சொந்தமான நிலத்தை வாங்கியுள்ளார். 22,700 சதுர அடி நிலத்தில் வணிக வளாகம் கட்டி தரவும், இதனை 15 மாதங்களில் கட்டி முடிக்க வேண்டும் எனவும் "ஸ்ரீ அபிராமி பௌண்டேஷன்" கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளார். கட்டுமான பணிகளுக்காக 3.58கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 1996 முதல் 1999 ஆம் ஆண்டு வரை நடிகர் கவுண்டமணி சார்பில் ஒரு கோடியே நான்கு லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் 2003ஆம் ஆண்டு வரை இதற்கான கட்டுமான பணிகளை கட்டுமான நிறுவனம் துவங்காததால், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கவுண்டமணி

இந்த வழக்கு விசாரணையில் ரூ.46.51 லட்சத்திற்கு மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டது என்று, வழக்கறிஞர் ஆணைய அறிக்கையின் வாயிலாக தெரிய வந்ததையடுத்து, கவுண்டமணியிடம் இருந்து பெற்ற 5 கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை மீண்டும் அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், 2008 ஆகஸ்ட் 1முதல் சொத்து ஒப்படைக்கும் நாள் வரை மாதம் ரூ.1 லட்சம் வீதம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் 2019 ஆம் ஆண்டு தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து ஸ்ரீ அபிராமி பௌண்டேஷன் கட்டுமான நிறுவன சார்பில் 2021ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து கட்டுமான நிறுவனத்தில் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். நடிகர் கவுண்டமணி தனியார் நிறுவனத்திடம் இருந்து நிலத்தை மீட்டு ஏறக்குறைய 20ஆண்டுகள் சட்ட போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Tags :
actor goundamaniComedy Actor Goundamanigoundamani land caseகவுண்டமணி
Advertisement
Next Article