அடேங்கப்பா...! பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ.224.26 கோடி வருவாய்...!
தமிழகம் முழுவதும் கடந்த 12-ம் தேதி அன்று பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ.224.26 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
ஆவணங்களைப் பதிவு செய்ய முன்பதிவு டோக்கன்கள் பதிவுத்துறை இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்ய ஒரு சார்பதிவாளருக்கு தினந்தோறும் 100 முன் ஆவணப்பதிவு டோக்கன்கள் மட்டுமே பதிவுத்துறை இணையதளத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 12-ம் தேதி அன்று ஆனி மாதம் கடைசி முகூர்த்த நாள் என்பதாலும் ஆடி மாதம் பிறக்க இருப்பதாலும் பொதுமக்கல் எந்த சிரமமும் இல்லாமல் ஆவணப் பதிவை மேற்கொள்ளவும் முன்பதிவு டோக்கன்கள் கிடைக்கப்பதில் சிரமப்படக்கூடாது என்பதற்காக ஏற்கனேவே நடைமுறையில் இருந்த ஆவணப்பதிவிற்க்கான 100 டோக்கன் சிறப்பு நிகழ்வாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 150 ஆக உயர்த்தப்பட்டது.
அதன்படி பொதுமக்கள் உயர்த்தப்பட்ட முன் ஆவணப்பதிவு டோக்கன்களை பயன்படுத்தி 12-ம் தேதி அன்று 20,310 ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டு உரிய சார்பதிவாளர்களால் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் உயர்த்தப்பட்ட ஆவண முன்பதிவு டோக்கன் பயன்படுத்தி 20,310 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு , பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ.224.26 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.