கல்லறையில் இருந்த 2,210 உடல்களை காணவில்லை..!! இஸ்ரேலின் ஆயுதங்களால் ஆவியாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு..!!
மனித உடல்களை ஆவியாக்கும் ஆயுதங்களை இஸ்ரேல் ராணுவம் தயாரிப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காஸாவின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 17,000 குழந்தைகள், 11,400 பெண்கள் உள்பட மொத்தம் 44,382 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த தாக்குதலில் 190 பத்திரிகையாளர்கள் மற்றும் சுமார் 1,000 சுகாதாரப் பணியாளர்களை இஸ்ரேல் ராணுவம் கொன்றுள்ளது.
இந்நிலையில் தான், மனித உடல்களை ஆவியாக்கும் ஆயுதங்களை இஸ்ரேல் ராணுவம் தயாரித்து வருவதாக காஸாவின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இயக்குநரான மருத்துவர் முனிர் அல்-புர்ஷ் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளர். இதுகுறித்து அவர் பேசுகையில், “காஸாவின் வடக்கு பகுதியில் பெயரறியாத ஆயுதங்களை காஸா மக்களின் மீது இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்துகிறது.
அந்த ஆயுதம் ஏவப்பட்டவுடன் அது மனித உடல்களை ஆவியாக்கிவிடுகின்றது. இதனால், காஸாவில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த ஆயுதமானது வரலாற்றில் இல்லாத அளவில் மிகப்பெரிய பேரழிவை உண்டாக்கியுள்ளது. இஸ்ரேல் பயன்படுத்தி வரும் ஆயுதங்கள் குறித்து சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட 1,760 பாலஸ்தீனர்களின் உடல்களை, சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி ஆவியாக்கிவிட்டதாக காஸாவின் பொது பாதுகாப்புத்துறை குற்றம்சாட்டியது. காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கட்டுப்படுத்தும் பகுதிகளில் இருக்கும் கல்லறைகளில் இருந்து சுமார் 2,210 உடல்களை காணவில்லை என்று கூறப்படுகிறது. இந்த உடல்கள் இஸ்ரேலின் ஆயுதங்களால் ஆவியாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
Read More : மகளிர் உரிமைத்தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகை..!! பெண்களே ரூ.2,000 உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரப்போகுது..?