அதிர்ச்சி.. "27 நாட்களில் அடுத்தடுத்து பலியான 220 குழந்தைகள்.." நாட்டை உலுக்கிய சோகம்.!
பாகிஸ்தான் நாட்டில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக இந்த ஒரு மாதத்தில் மட்டும் 220 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டு இருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த குளிர் காரணமாக ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து இதுவரை 10,520 குழந்தைகள் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருக்கிறது. அந்த நாட்டில் நிலவி வரும் கடும் குளிர் காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. மேலும் இறந்த குழந்தைகள் அனைவரும் 5 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் அரசின் சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டு இருக்கிறது.
இறந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்களுக்கு நிமோனியா தடுப்பூசி அளிக்கப்படவில்லை எனவும் அரசு தெரிவித்துள்ளது. மேலும் இறந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்ததாகவும் அரசு தெரிவித்துள்ளது. மேலும் முறையான தாய்ப்பால் கொடுக்கப்படாததால் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருந்ததாகவும் அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக பள்ளிகளில் நடத்தப்படும் காலை வணக்க கூட்டங்களை ரத்து செய்யும்படியும் அரசு உத்தரவிட்டிருக்கிறது .
நிமோனியா பாதிப்பால் இறந்த 220 குழந்தைகளில் 47 குழந்தைகள் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூரைச் சேர்ந்தவர்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி வழங்கப்பட்டு வருவதை அரசு தீவிரமாக கண்காணித்து வருவதாக பாகிஸ்தானின் நோய் தடுப்புக்கான நிர்வாகத் திட்டத்தின் இயக்குனர் முக்தார் அகமது தெரிவித்திருக்கிறார். முறையான தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருந்தால் இந்த இறப்புகள் நிகழ்ந்து இருக்காது எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.