For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

2024 ஏப்ரல் மாதம் மத்திய அரசின் வருவாய் ரூ.2,13,334 கோடி....!

06:32 AM Jun 01, 2024 IST | Vignesh
2024 ஏப்ரல் மாதம் மத்திய அரசின் வருவாய் ரூ 2 13 334 கோடி
Advertisement

2024 ஏப்ரல் நிலவரப்படி மத்திய அரசின் வருவாய் ரூ.2,13,334 கோடியாக உள்ளது என வருமான வரி தெரிவித்துள்ளது.

2024 ஏப்ரல் நிலவரப்படி மத்திய அரசின் வருவாய் ரூ.2,13,334 கோடியாக இருந்தது. இதில் ரூ1,84,998 கோடி வரி வருவாயாகும். ரூ.27,295 கோடி வரியல்லாத வருவாயாகவும் ரூ.1,041 கோடி கடன் அல்லாத மூலதன வருவாயாகவும் இருந்தது. வருவாயிலிருந்து மாநில அரசுகளுக்கு பகிரப்படும் வகையில், ரூ.69,875 கோடி வழங்கப்பட்டது. இது முந்தைய ஆண்டைவிட ரூ.10,735 கோடி அதிகமாகும்.

Advertisement

மத்திய அரசின் மொத்த செலவினம் ரூ.4,23,470 கோடியாக இருந்தது. இதில் ரூ.3,24,235 கோடி வருவாய் கணக்கிலும் ரூ.99,235 கோடி மூலதனக் கணக்கிலும் அடங்கும். மொத்த வருவாய் செலவினத்தில் ரூ.1,28,263 கோடி வட்டிக்காக செலுத்தப்பட்டத் தொகையாகும். ரூ.19,407 கோடி மானியங்களாக வழங்கப்பட்டது என மத்திய வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement