முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நர்சிங் கல்லூரி மாணவியுடன் ரூம் போட்டு உல்லாசம்..!! வீடியோவை தந்தை, சகோதரனுக்கு அனுப்பி வைத்த 21 வயது இளைஞர்..!!

He flirted with a nursing college student, claiming to be in love with her. He even recorded this on his cell phone as a video.
11:14 AM Jan 06, 2025 IST | Chella
Advertisement

கேரள மாநிலம் திருவல்லா மாவட்டம் குட்டபுழாவைச் சேர்ந்தவர் மிதுன் (21). இவர், நர்சிங் கல்லூரி மாணவியை காதலிப்பதாக கூறி உல்லாசமாக இருந்துள்ளார். இதை வீடியோவாகவும் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக கூறி மாணவியின் தந்தை மற்றும் சகோதரருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார்.

Advertisement

மாணவியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும், அவதூறாகப் பேசவும் மிதுன் நோக்கம் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மாவட்ட போலீஸ் சைபர் கிரைம் உதவியுடன் விசாரணைக் குழுவினர், மிதுனின் செல்போன் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தனர். பின்னர், மாவேலிக்கரை புல்லரிமங்கலத்தில் உள்ள அவரது அத்தையின் வாடகை வீட்டில் பதுங்கி இருந்த மிதுனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும், அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார் மாணவியின் அந்தரங்க புகைப்படங்களையும், வீடியோக்களையும் கண்டுபிடித்து செல்போனை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் ஐடி சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமை பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவியின் வீட்டின் குளியலறையிலும் சில வீடியோக்கள் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மிதுன் மாணவியை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். தற்போது மிதுன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Read More : அடகு கடை உரிமையாளருக்கு ஆப்பு வைத்த மாந்திரீகம்..!! தொழில் வளர்ச்சி அடைய சிறப்பு பூஜை..!! பண்ணை வீட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!

Tags :
கேரள மாநிலம்நர்சிங் கல்லூரி மாணவிபாலியல் பலாத்காரம்
Advertisement
Next Article