கலவர பூமியான வங்கதேசம்!! இந்திய மாணவர்களின் நிலை என்ன?
வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த இட ஒதுக்கீட்டில் முறைகேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும், இது தொடர்பாக டாக்கா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. அப்போது ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்தது. இதனையடுத்து டாக்காவில் உள்ள ஜகாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
போராட்டத்தில் ஈடுபடும் மாணவ, மாணவிகளுக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றது. அதேவேளை, போராட்டக்காரர்களை அந்நாட்டு அரசு அடக்கி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் விரட்டியடித்து வருகின்றனர். இதனால் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த போராட்டத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தங்கள் பாதுகாப்புக்கு அச்சப்பட்டு, இணையதள மற்றும் தொலைபேசி சேவைகளில் ஏற்பட்ட இடையூறு காரணமாக குடும்பத்தினரிடம் இருந்து துண்டிக்கப்பட்ட பல மாணவர்கள், தற்காலிகமாக தங்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டிய கடினமான முடிவை எடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பங்களாதேஷ் நாட்டில் மருத்துவ படிப்பை படிக்கும் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
Read more ; வெறும் ரூ.151 முதலீடு செய்தால் போதும்..!! லட்சங்களில் சம்பாதிக்கலாம்..!! எப்படி தெரியுமா..?