For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

2026இல் நம்ம தான்..!! பூவை தேடி தேனீக்கள் வருவது போல அதிமுகவை தேடி கூட்டணி கட்சிகள் வரும்..!! எடப்பாடி பழனிசாமி பேச்சு..!!

Edappadi Palaniswami has said that parties will automatically come to the alliance in search of AIADMK like bees come in search of flowers.
08:55 AM Oct 24, 2024 IST | Chella
2026இல் நம்ம தான்     பூவை தேடி தேனீக்கள் வருவது போல அதிமுகவை தேடி கூட்டணி கட்சிகள் வரும்     எடப்பாடி பழனிசாமி பேச்சு
Advertisement

பூவை தேடி தேனீக்கள் வருவது போல அதிமுகவை தேடி கூட்டணிக்கு கட்சிகள் தானாக வரும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

சேலம் மாவட்டம் நங்கவள்ளியை அடுத்த வனவாசியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று (அக்.23) நடந்தது. அப்போது பேசிய அவர், ”திமுகவில் கருணாநிதி குடும்பத்தை தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு வர முடியாது. ஆனால், அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா கூறியது போல், எனக்குப் பின்னும் அதிமுகவை யார் வேண்டுமானாலும் வழிநடத்துவார்கள்.

நான் கனவு காணவில்லை. ஸ்டாலின் தான் பகல் கனவு காண்கிறார். 2019இல் நடைபெற்ற எம்பி தேர்தலை காட்டிலும் கடந்த தேர்தலில் நாமக்கல்லில் வெறும் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. நாடாளுமன்ற தேர்தல் வேறு சட்டமன்ற தேர்தல் வேறு. கூட்டணி இல்லாமல் அதிக வாக்குகள் பெற்ற அதிமுகதான் வலுவான கட்சி. மத்தியில், குடும்ப உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்பதே ஸ்டாலினின் எண்ணம்.

நாமக்கல் மாவட்டத்துக்கு நிறைய திட்டத்தை கொண்டு வந்தது அதிமுகதான். கனவு உலகத்தில் மிதக்கும் முதல்வர், நாமக்கல் மாவட்டத்திற்கு திமுகதான் நிறைய திட்டங்களை கொடுத்துள்ளதாக பொய்யான தகவலை கூறுகிறார். திமுக கூட்டணி வலுவான கூட்டணியாகவே இருந்துவிட்டுப் போகட்டும். திமுக கூட்டணி வலுவாக இல்லை என்று நான் சொல்லவில்லை.. கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளே சொல்கிறார்கள். அதைத்தான் நான் வெளிப்படுத்துகிறேன்.

தேசிய கட்சியே எங்களை கூட்டணிக்கு அழைத்தது. ஆனால், அதிமுகவுக்கு ஆட்சி, அதிகாரம் முக்கியமில்லை. மக்களுக்கு சேவை செய்வதே எங்கள் நோக்கம். யாருடைய அழுத்தமும் இல்லாமல் நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளை பேச வேண்டும் என்பதற்காகவே தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்கவில்லை. பூவை தேடி தேனீக்கள் வருவது போல அதிமுகவை தேடி கூட்டணிக்கு கட்சிகள் தானாக வரும். ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். 2026இல் அதிமுக வெற்றி பெறுவது உறுதி. தமிழ்நாட்டில் சிறந்த ஆட்சியை அதிமுகவால்தான் தர முடியும்” என்றார்.

Read More : இது மட்டும் நடந்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும் தெரியுமா..? செம சர்ப்ரைஸ் இருக்கு..!!

Tags :
Advertisement