முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மக்களே...! 2024 பொங்கல் பரிசு தொகுப்பு...! முதல்வர் படத்துடன் கூடிய டோக்கன் ரெடி...!

09:05 AM Jan 05, 2024 IST | 1newsnationuser2
Advertisement

பொங்கல் பரிசுக்கான டோக்கன் தயார் நிலையில் உள்ளது.

கடந்த 2023 அக்டோபர் 31-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் என 2 கோடியே 19 லட்சத்து 57,402 பேருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்க ரூ.238 கோடியே 92 லட்சத்து 72,741 நிதி ஒதுக்கி நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதில் பச்சரிசியை பொருத்தவரை, ஒரு கிலோ ரூ.35.20 என்ற விலையில், 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.77.29 கோடி செலவினமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, ஒருகிலோ சர்க்கரை ரூ.40.61-க்கு கொள்முதல் செய்ய ரூ.89.18 கோடி, போக்குவரத்து செலவினம், வெட்டுக்கூலி உட்பட முழு கரும்புக்கு ரூ.33 வீதம் ரூ.72.46 கோடி என மொத்தம் ரூ.238 கோடியே 92 லட்சத்து 72 ஆயிரத்து 741 ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் பச்சரிசி கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையத்திடம் இருந்துசர்க்கரை கொள்முதல் செய்யப்படும். கடந்த ஆண்டு அக்டோபர் மாத விலையில் கொள்முதல் செய்து வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடையின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகப்பட உள்ளது. இதற்கான டோக்கன் தமிழக அரசு சார்பில் தயார் செய்யப்பட்டு விநியோகம் செய்ய ரெடியாக உள்ளது.

Tags :
Pongalration cardtn governmenttoken
Advertisement
Next Article