குட் நியூஸ்...! 2024 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான சம்பளப் பட்டியல் வெளியீடு...!
2024 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான சம்பளப் பட்டியல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) திட்டம் தொழிலாளர் அரசு காப்பீட்டு (இஎஸ்ஐ) திட்டம், தேசிய ஓய்வூதியத் திட்டம் ஆகிய 3 பெரிய திட்டங்களில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறித்த தகவலைப் பயன்படுத்தி முறை சார்ந்தத் தொழில்களில் வேலைவாய்ப்புத் தொடர்பான தரவுகளை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) திட்டத்தில் 2023-24-ம் ஆண்டில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 10,99,311 ஆகும். தொழிலாளர் அரசு காப்பீட்டு (இஎஸ்ஐ) திட்டத்தில், 2023-24-ம் ஆண்டில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1,67,60,872 ஆகும். தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் 2023-24-ம் ஆண்டில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 9,37,020 என இருந்தது.
இந்தப் புள்ளி விவரம் மேற்குறிப்பிட்ட 3 முகமைகளின் தகவல் அடிப்படையில் வெளியிடப்பட்டிருப்பதால் மாற்றத்திற்கு உட்பட்டதாகும். அறிக்கையின் முழு விவரத்தை https://www.mospi.gov.in/sites/default/files/press_release/Payroll_Reporting-April-250624.pdf என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.