For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"2024 கோல்டன் குளோப் விருதுகள்.." விருதுகளை அள்ளிய ஓப்பன்ஹைமர்.! மொத்த பட்டியல்.!

12:58 PM Jan 08, 2024 IST | 1newsnationuser7
 2024 கோல்டன் குளோப் விருதுகள்    விருதுகளை அள்ளிய ஓப்பன்ஹைமர்    மொத்த பட்டியல்
Advertisement

திரைத் துறையில் ஆஸ்கருக்கு அடுத்தபடியாக உரிய அங்கீகாரமாக கருதப்படுவது கோல்டன் குளோப் விருதுகள் ஆகும். இந்த விருதுகள் ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அசோசியேசன் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் நடைபெறும் இந்த விழாவில் சர்வதேச அளவில் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடல் சிறந்த பாடலுக்கான விருதை தட்டிச் சென்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் நிகழ்வை ஹாலிவுட் மற்றும் நகைச்சுவை நடிகரானஜோ கோய் தூது வழங்கினார். இந்த விருது வழங்கும் விழாவில் ஏராளமான ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

ஹாலிவுட் இயக்குனரான கிரிஸ்டோபர் நோலன் இயக்கிய ஒப்பன்ஹெய்மர் திரைப்படம் பல விருதுகளை வென்று இருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றதோடு சிறந்த இயக்குனர் சிறந்த நடிகர் சிறந்த துணை நடிகர் மற்றும் பின்னணி இசை போன்ற பல பிரிவுகளில் விருதுகளை குவித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படம் தவிர கடந்த ஆண்டு வெளியான பார்பி திரைப்படமும் பல விருதுகளை வென்றுள்ளது.

2024 கோல்டன் குளோப் விருதுகளை வென்ற திரைப்படங்களின் லிஸ்ட்:

சிறந்த திரைப்படத்திற்கான விருதை 'ஓப்பன்ஹைமர்' திரைப்படம் வென்று இருக்கிறது .

சிறந்த நடிகருக்கான விருதை 'ஓப்பன்ஹைமர்' திரைப்படத்தில் நடித்த ராபர்ட் வென்று இருக்கிறார்.

சிறந்த நடிகைக்கான விருதை புவர் திங்ஸ் திரைப்படத்தில் நடித்ததற்காக எமிலா ஸ்டோன் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் மூலம் ஓப்பன்ஹைமர் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான விருதை தட்டிச் சென்றார்.

சிறந்த துணை நடிகருக்கான விருது ஓப்பன்ஹைமர் திரைப்படத்தில் லிவிஸ் ட்ராவஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ராபர்ட் பிரௌனி ஜூனியருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த துணை நடிகைக்கான விருது டாவின் ஜாய் ராண்டால்ஃப் என்ற நடிகைக்கு தி ஹோல்டோவேர்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக வழங்கப்பட்டிருக்கிறது.

சிறந்த திரைக்கதை காண விருது ஜஸ்டின் ட்ரைட் மற்றும் ஆர்தர் ஹராரி ஆகியோருக்கு 'அனாடமி ஆஃப் எ ஃபால்' படத்தின் திரைக்கதைக்காக வழங்கப்பட்டிருக்கிறது.

ஆங்கிலம் அல்லாத பிற மொழியில் சிறந்த திரைப்படத்திற்கான விருது 'அனாடமி ஆஃப் எ ஃபால்' திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த பின்னணி இசை காண விருது ஓப்பன்ஹைமர்' படத்திற்காக இசையமைத்த லுட்விக் கோரன்சன் என்ற இசையமைப்பாளருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

சிறந்த பாடலுக்கான விருதை பார்பி திரைப்படத்தில் இடம் பெற்ற 'வாட் ஐ வாஸ் மேட் ஃபார்' என்ற பாடல் தட்டிச் சென்றுள்ளது.

Tags :
Advertisement