முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

2024 தேர்தல்!… பிரதமரின் மெகா பிளான்!… கிலோ ரூ.25க்கு மலிவு விலை 'பாரத் அரிசி' விற்பனை!

06:25 AM Dec 28, 2023 IST | 1newsnationuser3
Advertisement

நாளுக்குநாள் அதிகரித்து வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்கும் வகையில் கிலோ ரூ.25க்கு ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் மலிவு விலையிலான அரிசியை அறிமுகம் செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நாட்டில் ஏற்கெனவே பாரத் ஆட்டா (கோதுமை மாவு) கிலோ ரூ.27.50, பாரத் டால் (பருப்பு வகைகள்) கிலோ ரூ.60 என தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் பாரத் அரிசி விற்பனை செய்யப்படும் என தகவல். அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED), தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு இந்தியா லிமிடெட் (NCCF), கேந்திரிய பந்தர் விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வேன்கள் மூலமாக விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்திய அளவில் அரிசியின் சராசரி விலை கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது பல மடங்கு உயர்ந்துள்ள காரணத்தால் ‘பாரத் அரிசி’யை அரசு கொண்டு வர உள்ளதாக சொல்லப்படுகிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை நிலைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு கொண்டு வருகிறது. அந்த வகையில் பாசுமதி அல்லாத அரிசி வகை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags :
'Bharat Rice''பாரத் அரிசி'2024 தேர்தல்Prime Minister ModiRs.25 per kgகிலோ ரூ.25மலிவு விலை
Advertisement
Next Article