For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

2024 குரு பெயர்ச்சி.! மாற்றங்களும் முன்னேற்றங்களும் கிடைக்க இருக்கும் ராசிகள்.!

05:40 AM Dec 12, 2023 IST | 1newsnationuser4
2024 குரு பெயர்ச்சி   மாற்றங்களும் முன்னேற்றங்களும் கிடைக்க இருக்கும் ராசிகள்
Advertisement

இன்னும் 20 நாட்களில் புது வருடம் பிறக்க இருக்கிறது. வர இருக்கின்ற 2024 ஆம் ஆண்டில் அனைத்து ராசி மற்றும் நட்சத்திரங்களுக்கான பலன் எப்படி இருக்கும் என்பதை ஜோதிடர்கள் இப்போதே கணிக்க தொடங்கி விட்டனர். அவர்களது கணிப்பின்படி 2024 ஆம் ஆண்டின் சித்திரை மாதம் குரு பெயர்ச்சி மட்டுமே நடைபெற இருக்கிறது. இந்த குரூப் பெயர்ச்சி மே மாதம் துவங்க இருக்கிறது. இது எந்த ராசிகளில் மாற்றங்களை கொண்டு வரும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

2024 ஆம் ஆண்டு சித்திரை மாதம் நடைபெற இருக்கும் குரு பெயர்ச்சியால் தனுசு மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு பல்வேறு மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் நடக்க இருப்பதாக ஜோதிடர்கள் கணித்திருக்கின்றனர். தனுசு ராசி காரர்களுக்கு குருவின் பார்வையை தொழில் மீது இருக்கும். இதனால் அவர்களது தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு போன்றவை தேடி வரும். படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு வேலை கிடைக்கும். எனினும் இவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். எனினும் இவர்களுக்கு அதிக பயணம் மற்றும் அலைச்சல் இருக்கும். அவையும் தொழில் சார்ந்ததாகவே இருக்கும்.

கையில் வரும் பணத்தை வீடு சொத்து என வாங்கி சுயப விரையம் செய்யலாம். தனுசு ராசிக்காரர்கள் சொந்தக்காரர்களிடமும் உறவினர்களிடமும் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு திருமணம் மற்றும் கிரகப்பிரவேசம் போன்ற விசேஷங்கள் கை கூட வாய்ப்பு இருக்கிறது. குடும்ப ஸ்தானத்தின் மீதும் குரு பார்வை விழுவதால் ரொம்ப கஷ்டங்கள் நீங்கும். நிலுவையில் இருக்கும் வழக்குகளில் வெற்றி கிட்டும். மகர ராசிக்காரர்கள் கடந்த ஐந்து வருடங்களாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இவர்களுக்கு இந்த வருடம் குருவின் இடம் பெயர்ச்சியால் நல்ல பலன்கள் காத்திருக்கிறது. அவர்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். ஜாதகத்தால் தடைபட்ட திருமணங்களும் நடைபெறும்.

நீண்ட நாட்களாக புத்திர பாக்கியம் இல்லாத மகர ராசிக்காரர்களுக்கு வர இருக்கின்ற ஆண்டில் குரு பெயர்ச்சி நல்ல செய்தியை கொண்டு வருகிறது. சிரபாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். நிம்மதியான வாழ்க்கை மற்றும் வேலைகளில் பதவி உயர்வும் இவ்வளவு உயர்வும் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. மகர ராசிக்காரர்கள் செய்த நல்ல காரியங்களுக்கான முழு பலன் இப்போது கிடைக்கப் போகிறது . உங்கள் வேலைகளின் மூலம் உங்களை பல அதிர்ஷ்டம் தேடி வர இருக்கிறது. எனவே தற்போது இருக்கும் வேலையை விட்டுவிட வேண்டாம். நல்ல வேலை கிடைத்தவுடன் இருக்கும் வேலையை விடலாம். மொத்தத்தில் 2024 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சி மகர ராசி காரர்களுக்கு சிறப்பான ஒன்றாக அமைய இருக்கிறது.

Tags :
Advertisement