For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

2024 - 2025 : பெற்றார்கள் கவனத்திற்கு...! இன்று முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை....! முழு விவரம்

05:50 AM Mar 01, 2024 IST | 1newsnationuser2
2024   2025    பெற்றார்கள் கவனத்திற்கு      இன்று முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை      முழு விவரம்
Advertisement

அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் 2024 - 2025ம் கல்வி ஆண்டிற்கு, இன்று முதல் மாணவர்கள் சேர்க்கை துவங்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

Advertisement

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2024-25ம் கல்வியாண்டில் 5 வயது பூர்த்தியடைந்த மற்றும் பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் மார்ச் 1-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி, அதில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களையும் பங்கு பெறச் செய்து, அரசு ஆசிரியர்கள் அனைவரையும் கொண்டு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை சிறப்பு முகாம் அடிப்படையில் கோடை விடுமுறைக்கு முன்னரே மேற்கொள்ள, அனைத்து ஆசிரியர்களுக்கும் பொறுப்புக்களை பிரித்து வழங்கி, சேர்க்கையை அதிகரித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌

English Summary : For the academic year 2024-2025, students should start admission from today

Tags :
Advertisement