முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

2022-23 நிதியாண்டு வரை நேரடி வரி புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிட்டது...!

07:00 AM Jan 24, 2024 IST | 1newsnationuser2
Advertisement

மத்திய நேரடி வரிகள் வாரியம் நேரடி வரி வசூல் மற்றும் நிர்வாகம் தொடர்பான முக்கிய புள்ளி விவரங்களை அவ்வப்போது பொது தளத்தில் வெளியிட்டு வருகிறது. மேலும் தகவல்களை பொது தளத்தில் வைப்பதற்கான அதன் முயற்சிகளின் தொடர்ச்சியாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் 2022-23 நிதியாண்டு வரை புதுப்பிக்கப்பட்ட ஒருங்கிணைந்த கடந்த கால ஒப்பீடுகளுடன் கூடிய தரவை வெளியிட்டுள்ளது.

Advertisement

இந்த புள்ளி விவரங்களில் சிலவற்றின் முக்கிய சிறப்பம்சங்கள்:

2013-14 நிதியாண்டில் ரூ.6,38,596 கோடியாக இருந்த நிகர நேரடி வரி வசூல் 2022-23 நிதியாண்டில் ரூ.16,63,686 கோடியாக 160.52% அதிகரித்துள்ளது. 2022-23 நிதியாண்டில் ரூ.19,72,248 கோடியாக இருந்த மொத்த நேரடி வரி வசூல், 2013-14 நிதியாண்டில் ரூ.7,21,604 கோடியாக இருந்த மொத்த நேரடி வரி வசூலுடன் ஒப்பிடுகையில் 173.31% அதிகரித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நேரடி வரி விகிதம் 2013-14 நிதியாண்டில் 5.62% ஆக இருந்தது, 2022-23 நிதியாண்டில் 6.11% ஆக அதிகரித்துள்ளது.

2013-14 நிதியாண்டில் மொத்த வசூலில் 0.57% ஆக இருந்த வசூல் செலவு 2022-23 நிதியாண்டில் மொத்த வசூலில் 0.51% ஆக குறைந்துள்ளது. 2022-23 நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த வருமான வரித் தாக்கலின் எண்ணிக்கை 7.78 கோடியாக உள்ளது, இது 2013-14 நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட 3.80 கோடி வருமான வரித் தாக்கலின் மொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 104.91% அதிகரித்துள்ளது.

இந்தியாவில் நேரடி வரி நிர்வாகத்தின் செயல்திறன் குறித்த பல்வேறு குறியீடுகளின் நீண்டகால போக்குகளை ஆய்வு செய்வதற்கு கல்வியாளர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு காலகட்டங்களின் தரவு பொது தளத்தில் கிடைப்பது பயனுள்ளதாக இருக்கும்.

Tags :
central govtTaxTax collection
Advertisement
Next Article