முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நெருங்கும் தைப்பூசம்.. திருமணத் தடையை உடைக்க, முருகன் வழிபாடு எப்படி செய்வது.? 

08:50 PM Jan 23, 2024 IST | 1newsnationuser5
Advertisement

தமிழ் கடவுள் முருகனின் திருவிழாக்களில் முக்கிய விழாவாக இருப்பது தைப்பூச திருவிழா. இது தை மாதத்தில் வருகின்ற பௌர்ணமியோடு சேர்ந்து கொண்டாடப்படும். இந்த ஆண்டு வரும் ஜனவரி 25ல் தைப்பூச திருவிழா வருகிறது. இந்த தைப்பூச நாளில் தான் முருகன் வள்ளியை திருமணம் செய்து கொண்டார். எனவே இந்த நாளில் திருமணமாகாமல் இருக்கும் நபர்கள் வழிபாடு செய்வது திருமண தடை நீங்கி மணமாலை சூட வழி கிடைக்கும். அத்துடன் இந்த நாளில் வரம் தேடும் பட்சத்தில் நல்ல வரன் கிடைப்பதுடன் இந்த வரன் உறுதியாவதும் நிச்சயம். 

Advertisement

இந்த தைப்பூச நாளில் திருமண பேச்சை ஆரம்பித்தால் அது எந்த தடையும் இல்லாமல் நல்ல விதமாக முடியக்கூடும். இந்த நாளில் விரதம் இருப்பது திருமண தடையை உடைக்க உதவும். தைப்பூச நாளில் ஆரம்பித்து அடுத்த 13 நாட்களுக்கு இவ்விரதத்தை கடைபிடிக்க வேண்டும். அன்றாடம் காலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு முருகனின் படத்தை சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் வைத்து விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். இதை காலை, மாலை இரண்டு வேளையும் மேற்கொள்ள வேண்டும்.

தேவர்களில் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம். எனவே, தைப்பூசத்தன்று குரு வழிபாடு மேற்கொள்வது மிகுந்த பலனைத் தரும். அத்துடன், குடும்பத்தில் செல்வ செழிப்பு ஏற்படும். இதுமட்டுமல்லாமல், கணவன், மனைவி இருவருக்கும் இடையில் நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை தழைத்தோங்கும். இந்த தைப்பூச நாளில், முதன் முதலில் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்வை துவங்கலாம். மேலும் மொட்டை அடிப்பது, காது குத்துவது போன்ற சுபகாரியங்களையும் மேற்கொள்ளலாம்.

Tags :
marriagemuruganThaippusamThirumanathadai
Advertisement
Next Article