முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால்..!! விசாரணையில் அதிர்ச்சி..!! சீல் வைத்த சிபிசிஐடி..!!

As 2000 liters of methane were found to be stored, the police temporarily sealed the petrol tank concerned.
09:18 AM Jul 04, 2024 IST | Chella
Advertisement

2000 லிட்டர் மெத்தனால் பதுக்கப்பட்டிருப்பதாக தெரியவந்த நிலையில், போலீசார் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்கிற்கு தற்காலிகமாக சீல் வைத்தனர்.

Advertisement

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் ஜூன் 18ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதையடுத்து, மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த 21 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அந்தவகையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் கைதான மாதேஷை காவலில் எடுத்துள்ள சிபிசிஐடி போலீசார், நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.

வீரப்பெருமாநல்லூர் பகுதியில் உள்ள செயல்படாத பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கியதாக மாதேஷ் விசாரணையில் தெரிவித்ததாக போலீஸார் கூறுகின்றனர். அந்த பெட்ரோல் பங்கின் கீழே புதைக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் டேங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கி உள்ளதாகவும் அவர் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, பெட்ரோல் பங்கிற்கு நேரில் வந்து விசாரித்த சிபிசிஐடி போலீசார், அந்த இடத்துக்கு தற்காலிகமாக சீல் வைத்தனர்.

முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க 562 கிராம அளவிலான கண்காணிப்பு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More : இந்திய ரூபாய் நோட்டுகள் எப்படி தயாரிக்கப்படுகிறது தெரியுமா..? கண்டிப்பா நீங்களும் தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
கள்ளச்சாராயம்மெத்தனால்
Advertisement
Next Article