நாடு முழுவதும் இன்று விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2,000...!
பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசியில் பிஎம் கிசான் திட்டத்தின் 17வது தவணையை விடுவிக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசியில் பிஎம் கிசான் திட்டத்தின் 17வது தவணை ரூ.2000 விடுவிக்கிறார். இதில் 9.26 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் ரூ.20,000 கோடிக்கும் அதிகமான பலன்களைப் பெறுவார்கள். வேளாண் தோழிகளாகப் பயிற்சி பெற்ற 30,000-க்கும் அதிகமான சுய உதவிக் குழுக்களுக்கு இணை விரிவாக்கப் பணியாளராகப் பணியாற்றுவதற்கான சான்றிதழ்களையும் பிரதமர் வழங்குவார்.
இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் பல்வேறு மாநில அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். நாடு முழுவதும் உள்ள 732 வேளாண் அறிவியல் மையங்கள், 1 லட்சத்துக்கும் அதிகமான தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், 5 லட்சம் பொதுச் சேவை மையங்கள் மற்றும் 2.5 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 50 வேளாண் வளர்ச்சி மையங்களில், சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, இதில் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் பங்கேற்பார்கள். இந்த மையங்களில், பல மத்திய அமைச்சர்களும் விவசாயிகளுடன் கலந்துரையாடுவார்கள்.