முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பாகிஸ்தானின் 200 யாத்ரீகர்கள் ராமர் கோயிலுக்கு வருகை..!! பலத்த ஏற்பாடு..!!

02:31 PM May 03, 2024 IST | Chella
Advertisement

பாகிஸ்தானில் இருந்து அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு வரும் 200 யாத்ரீகர்களுக்கு இன்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் ஜனவரி 22ஆம் தேதி இதற்கான விழா கோலாகலமாக நடைபெற்றது. ஜனவரி 23ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமர் கோயிலுக்குச் சென்று பால ராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து 200 பேர் கொண்ட தூதுக்குழு அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு இன்று வர உள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த சிந்தி சமூகத்தினர் இந்தியாவில் ஒரு மாதம் சுற்றுலா வருகின்றனர். இரவு அலங்காரத்தில் ஜொலிக்கும் ராமர் கோயில் "பிரயாக்ராஜில் இருந்து அயோத்திக்கு சாலை வழியாக அவர்கள் வருகின்றனர். அவர்களுடன் இந்தியாவின் சிந்தி சமூகத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் மதப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர். அவர்களுக்கு ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா குழு சார்பில் வரவேற்பளிக்கப்பட உள்ளது.

இதற்காக சிறப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரயாக்ராஜில் இருந்து இந்த சுற்றுலாப் பயணிகள் குழு பேருந்து மூலம் அயோத்தியை அடைவார்கள். பாரத் குண்டா, குப்தர் காட், ரூபன் உள்ளிட்ட பல்வேறு இடங்களை இக்குழு பார்வையிடும்" என ராஷ்டிரிய சிந்தி விகாஸ் பரிஷத் உறுப்பினர் விஸ்வ பிரகாஷ் ரூபான் தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானில் இருந்து இந்தியா வரும் சிந்தி யாத்ரீகர்கள் அயோத்திக்கு வர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Read More : இன்றுடன் ஓராண்டு..!! மனோபாலா மறைவுக்கு பிறகு ரிலீசான படங்கள் எத்தனை தெரியுமா..? வெயிட்டிங் லிஸ்ட்டில் இத்தனையா..?

Advertisement
Next Article