முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆந்திராவில் இருந்த தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சா...! மடக்கி பிடித்த தமிழக காவல்துறை

200 kg of ganja smuggled to Tamil Nadu from Andhra Pradesh.
06:03 AM Oct 20, 2024 IST | Vignesh
Advertisement

ஆந்திராவில் இருந்த தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சா தமிழக காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தில் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்த EBCID, தமிழ்நாடு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. முக்கிய சோதனை நடத்தப்பட்டதில் 17 அக்டோபர் 2024 அன்று மத்திய நுண்ணறிவு பிரிவு சென்னை ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் அன்பரசி மற்றும் அவரது குழுவினர் மாநிலங்களுக்கு இடையேயான 4 கஞ்சா கடத்தல்காரர்களை பிடித்து சுமார் ரூ.20,00,000/- மதிப்புள்ள 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மினி லோட் கேரியரான Force Trax பதிவு எண் AP 39 UH 5461 மற்றும் பதிவு எண் AP 21 UH 5461 கொண்ட கார் Honda Amaze ஆகியவற்றை குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றினர்.

ஆந்திராவை சேர்ந்த சகோதரர்கள் ராஜு (@) மோகன்ராஜ், சண்முகநாதன் (@) பிரபு. பாலமுருகன் ஆகியோர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கொண்டு வந்து தமிழகத்தில் விற்பனை செய்தனர். கஞ்சா ஏற்றிச் சென்ற சுமை வாகனத்திற்கு எஸ்கார்ட் சென்ற ஹோண்டா அமேஸ் காரை செந்தில்நாதன் என்பவர் ஓட்டினார். குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது. தகவலறிந்து வந்த சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸார் திருவள்ளூர் எளாவூர் சோதனைச் சாவடி அருகே வாழைப்பழம் ஏற்றிச் சென்ற வாகனத்தை மடக்கிப் பிடித்தனர். போலீசார் வாகனத்தை சோதனை செய்ததில் 100 கிலோ எடையுள்ள 10 கஞ்சா பார்சல்கள் கண்டறியப்பட்டது. வாகனத்தில் ஒரு ரகசிய அறை இருப்பதைக் கண்டறிந்த குழுவினர் மேலும் 100 கிலோ எடையுள்ள 10 பார்சல்களையும் கைப்பற்றினர்.

இந்த நடவடிக்கையை சென்னையின் மத்திய நுண்ணறிவு பிரிவின் காவல் கண்காணிப்பாளர் வி.ஷ்யாமளா தேவி மற்றும் என். எம். மயில்வாகனன் இ.கா.ப. காவல்துறை தலைவர், அமலாக்கம், சென்னை ஆகியோர் மேற்பார்வையிட்டனர். மத்திய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளின் சிறப்பான செயல்பாட்டினை காவல்துறை இயக்குநர் ஷங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை இயக்குநர் EBCID அமலாக்கப் பணியகம் அமல்ராஜ், ஆகியோர் பாராட்டினர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பான எந்தவொரு தகவலையும் 10581 அல்லது CUG எண். 9498410581 என்ற இலவச எண்ணுக்கு பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும்.

Tags :
andhraganjaSankar jiwaltn police
Advertisement
Next Article