காட்டிக் கொடுத்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்.! அறை எண் 201-ல் சடலம்.! பிளேபாய் காதலனின் கைவரிசை.!
சென்னை குரோம்பேட்டையில் தங்கி படித்து வந்த நரசிங் மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தப்பி ஓடிய காதலன் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பவுசியா(20). இவர் தனியார் விடுதியில் தங்கி சென்னையில் உள்ள நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆஷிக் என்ற 20 வயது இளைஞனும் பள்ளிப் பருவம் முதலே காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது காதலன் சென்னை வருவதால் அவரைப் பார்ப்பதற்காக பவுசியா சென்று இருக்கிறார். இருவரும் குரோம்பேட்டையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அரை எடுத்து தங்கி உள்ளனர்.
காதலனை பார்க்கச் சென்ற பவுசியா கடந்த மூன்று நாட்களாக கல்லூரிக்கும் செல்லவில்லை. இந்நிலையில் பவுசியாவின் காதலன் ஆசிக் அவரை கொலை செய்து விட்டதாக வைத்திருந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்த்து அதிர்ச்சி அடைந்த பவுசியாவின் தோழிகள் இது தொடர்பாக காவல்துறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தோழிகள் கூறிய தனியார் விடுதிக்கு காவல்துறை விரைந்தது. இதனையடுத்து அவர்கள் தங்கி இருந்த 201 ஆம் நம்பர் ரூமுக்கு சென்று பார்த்தபோது கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்திருக்கிறார் பவுசியா.
உடனடியாக அவரது சடலத்தை கைப்பற்றிய காவல் துறை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது. மேலும் அவருடன் தங்கி இருந்த காதலனை தீவிரமாக தேடி வந்த நிலையில் சென்னை பல்லாவரம் பகுதியில் தங்கி இருந்த ஆஷிக் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது. பௌசியா மற்றும் ஆஷிக் இருவரும் பள்ளி பருவம் முதலே காதலித்து வந்துள்ளனர். குழந்தை பருவத்திலேயே பவுசியா கர்ப்பமாகி இவர்களுக்கு குழந்தையும் பிறந்திருக்கிறது. அந்தக் குழந்தை தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்து வருவதாகவும் ஆசிக் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டிருக்கிறது. பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் இது தொடர்பாக அவருக்கும் பவுசியாவிற்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் பவுசியாவை கொலை செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.