For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நகைக்கடையில் சரசரவென புகுந்த 20 முகமூடி கொள்ளையர்கள்..!! சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி காட்சி..!!

There is a Pune-headquartered jewelery store operating in the US. The incident of sudden robbery by masked assailants here has caused a shock.
06:58 PM Jun 17, 2024 IST | Chella
நகைக்கடையில் சரசரவென புகுந்த 20 முகமூடி கொள்ளையர்கள்     சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி காட்சி
Advertisement

அமெரிக்காவில் புனேவைத் தலைமையிடமாகக் கொண்ட நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு திடீரென முகமூடி அணிந்த மர்மநபர்கள் புகுந்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கலிபோர்னியாவின் சன்னிவேலில் இந்தியர் ஒருவருக்கு சொந்தமாக 'பிஎன்ஜி ஜூவல்லர்ஸ்' என்ற நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடையில் ஒரே ஒரு பாதுகாவலர் மட்டும் பணியில் இருந்தார். அப்போது, சரியாக நோட்டமிட்ட 20 பேர் கொண்ட கும்பல் கையில் சுத்தியலுடன் கடையின் கண்ணாடிகளை உடைக்க தொடங்கினர். கண்ணாடி உடைந்ததும் அந்த கும்பல் கடையில் இருந்த நகைகளை கொள்ளையடிக்கத் தொடங்கினர்.

ஒரே நேரத்தில் 20 பேர் வந்த காரணத்தால், கடையில் இருந்த ஒரே ஒரு பாதுகாவலரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால், கடைக்குள் இருந்த நகைகள் அனைத்தையும் திருடி எடுத்துக்கொண்டு காரில் அந்த கும்பல் சென்றுள்ளனர். இது கடைக்குள் இருந்த சிசிடிவி கேமரா காட்சியில் பதிவாகியுள்ளது.

கொள்ளையடித்த அந்த நபர்கள் நெடுஞ்சாலை 101 வழியாக அதிவேகமாக சென்ற நிலையில், காவல்துறையினர் அவர்களை துரத்திச் சென்றனர். இதில், 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களும் காரை கைவிட்டுவிட்டு தப்பிக்க முயன்றனர். போலீஸ் நாயின் உதவியால் 5 பேரும் சுற்றி வளைக்கப்பட்டனர். தற்போது அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Read More : பெண் காவலரை ஓட ஓட விரட்டி வெட்டிய கணவன்..!! காஞ்சிபுரத்தை கதிகலங்க வைத்த சம்பவத்தின் பின்னணி..!!

Tags :
Advertisement