சற்றுமுன்...! உ.பி-யில் சபர்மதி எக்ஸ்பிரஸ் விபத்து... தடம் புரண்ட 20 பெட்டிகள்...! பயணிகள் நிலை என்ன...?
உத்தரபிரதேசத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் தடம் புரண்டன.
இன்று அதிகாலை உத்தரபிரதேசத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலின் சுமார் 20 பெட்டிகள் தடம் புரண்டன. கான்பூர் ரயில் நிலையம் அருகே ரயில் ஜான்சிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வட மத்திய ரயில்வேயின் கூற்றுப்படி, வாரணாசி சந்திப்பு மற்றும் அகமதாபாத் இடையே இயக்கப்படும் சபர்மதி எக்ஸ்பிரஸ் ஒரு பாறை கற்கள் மீது மோதியதால் தடம் புரண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ரயிலை முழுமையாக ஆய்வு செய்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.
"பயணிகளை வேறொரு நிலையத்திற்கு ஏற்றிச் செல்ல பேருந்துகளை ரயில்வே ஏற்பாடு செய்து வருகிறது, அங்கிருந்து அவர்கள் சிறப்பு ரயில் மூலம் அனுப்பப்படுவார்கள்" என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.