கண்களின் ஆரோக்கியத்தை காக்கும் 20-20-20 ரூல்.! என்னனு தெரிஞ்சுக்கலாம் வாங்க.!
கண்கள் நம் உடலின் முக்கியமான புலன் உறுப்பாகும். இந்த கண்களின் உதவியால் தான் நம் அன்பானவர்களையும் இந்த உலகின் அழகையும் அதிசயங்களையும் பார்த்து ரசிக்க முடிகிறது. இத்தகைய கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம். கண்கள் நீண்ட நாட்களாக ஆரோக்கியமாக இருந்தால் பார்வை குறைபாடு போன்ற பிரச்சனைகள் வராது.
வெயில் காலத்தை விட குளிர்காலத்தில் தான் கண்கள் அதிகம் வறண்டு போகும். இதற்கு முக்கிய காரணம் நமது உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதாகும். குளிர்காலத்தில் அடிக்கடி தாகம் எடுக்காததால் நாம் போதுமான நீர் அருந்துவதில்லை. இதன் காரணமாக நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு கண்கள் வறண்டு போகும். இதனால் பார்வை குறைபாடு மற்றும் எழுத்துக்களை வாசிப்பதில் சிரமம் உண்டாகும். இந்தப் பிரச்சனைகளை சரி செய்வதற்கு நான் ஒன்றுக்கு நான்கு முதல் ஐந்து லிட்டர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் கண் பார்வை திறன் அதிகரிப்பதற்கும் கண்கள் வறண்டு போவதை தடுப்பதற்கும் 20-20-20 என்ற செயல்முறை ஒன்று இருக்கிறது. இதனை பயன்படுத்துவதன் மூலம் கண் பார்வை குறைபாடு ஏற்படுவதை தடுக்க முடியும். அதாவது அதிக நேரம் கணினி மற்றும் செல்போன் போன்றவற்றை பார்த்துக் கொண்டிருந்தால் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 அடி தூரத்திற்கு 20 வினாடிகள் பார்வையை செலுத்த வேண்டும். இதுதான் 20-20-20 முறையாகும். இவ்வாறு செய்யும்போது கண்கள் வறட்சி அடைவதை தடுப்பதோடு கண் பார்வை திறன் பாதிக்கப்படுவதையும் தடுக்கலாம்.
மேலும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் பார்வை குறைபாடு ஏற்படுவதை தடுக்கவும் வைட்டமின் சி, ஏ, ஈ மற்றும் சிங்க் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பீட்டா கரோட்டின் நிறைந்திருக்கும் உணவுகளும் நான் பார்வை ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. கீரைகள் கேரட் முட்டை போன்றவற்றை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலமும் கண்களின் ஆரோக்கியத்தை பேணலாம்.