முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Breaking...! கனமழை காரணமாக நீலகிரியில் 2 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை...!

2 taluk schools closed in Nilgiris due to heavy rains.
07:27 AM Jul 26, 2024 IST | Vignesh
Advertisement

நீலகிரியில் கனமழையை அடுத்து உதகை, குந்தா ஆகிய 2 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தற்பொழுது வரை தொடர் கனமழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தொடர் மழை பெய்து வருகின்றது. நேற்று நள்ளிரவு முதல் நீலகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக உதகை, குந்தா ஆகிய 2 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Tags :
Nilgirisrainrain alertschool holiday
Advertisement
Next Article