முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உஷார்...! மேலும் 2 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு...! தமிழகத்தில் 15 பேருக்கு உறுதி...

06:10 AM Dec 21, 2023 IST | 1newsnationuser2
Advertisement

ராஜஸ்தான் மாநிலத்தில் 2 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்தியாவில் புதிய வகை கொரோனா ஜே.என்.1 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினரான வி.கே. பால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று 288 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சென்னை மாவட்டத்தில் 6 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 3 பேருக்கும், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், மதுரை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

கேரளாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 292 பேர் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். ஏற்கனவே தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சல்மார் மாவட்டத்தில் பாபர்மர்கா, மஸ்தூர் படா ஆகிய பகுதிகளில் 2 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

உலகளாவிய கொரோனா நிலைமை ஒப்பிடும்போது, இந்தியாவில் உள்ள கொரோனா பாதிப்பு கணிசமாகக் குறைவாக இருந்தாலும், கடந்த இரண்டு வாரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2023 டிசம்பர் 6 அன்று 115 லிருந்து இன்று 614 ஆக கடுமையாக உயர்ந்துள்ளன. 92.8% பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்., இது லேசான நோயைக் குறிக்கிறது. கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதங்களில் எந்த அதிகரிப்பும் காணப்படவில்லை, மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகள் பிற மருத்துவ காரணங்களால் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags :
central govtcovidKeralarajasthanTamilanaduvariant
Advertisement
Next Article