முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

படிப்பு செலவுக்கு அரசு வழங்கும் 2 லட்சம் ரூபாய் உதவித்தொகை...! எப்படி விண்ணப்பிப்பது...?

07:45 AM Dec 09, 2023 IST | 1newsnationuser2
Advertisement

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகைக்கென (Fresh and Renewal applications) விண்ணப்பிக்கலாம்.

Advertisement

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ/ மாணவியருக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00 இலட்சம் வரை கல்வி உதவித் தொகையாக வழங்குவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது.

மேற்படி கல்வி உதவித் தொகைக்கு 2023-24- ஆம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் (Fresh and Renewal applications) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணாக்கர்கள், ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம் எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5, என்ற முகவரியிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கக அலுவலகத்திலோ அல்லது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகி விபரங்கள் பெறலாம். அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship schemes முகவரியின் வாயிலாக விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், 2023-24 ஆம் நிதியாண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பித்தல் வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து, ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5. என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பங்களை 15.12.2023-க்குள் மற்றும் புதியது (Fresh) விண்ணப்பங்களை 15.01.2024-க்குள் அனுப்பி வைத்தல் வேண்டும். மேலும், விபரங்களுக்கு 044-29515942 என்ற தொலைபேசி எண்ணிலும், tngovtiitscholarship@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம்.

Advertisement
Next Article