வேலை வாய்ப்புகளை அறிவித்த நிறுவனம்.. இந்த துறையில் மட்டும் 2 லட்சம் பேருக்கு வேலை..!
கொரோனாவுக்கு பின் மக்கள் பழையபடி செலவு செய்ய தொடங்கியுள்ளனர், குடும்பத்துடன் சுற்றுலா செல்வது உள்ளிட்டவை அதிகரித்துள்ளதால் ஹோட்டல்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே தங்கும் விடுதிகளை நடத்தி வரும் நிறுவனங்கள் அவற்றை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளன என டீம் லீஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ராயல் ஆர்சிட் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனரான சந்தர் கே பாலாஜி, இந்த ஆண்டில் மட்டும் தங்களது ஹோட்டல்களில் புதிதாக 2000 அறைகளை சேர்க்க இருப்பதாகவும், 5,000 பேரை வேலைக்கு எடுக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். இது போன்ற சிறிய மற்றும் மத்திய அளவிலான தங்கும் விடுதிகளில் 30 முதல் 50 சதவிகிதம் வரை வேலை வாய்ப்புகள் உயர்ந்திருப்பதாக இந்த துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.
லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ் நிறுவனம் புதிதாக 3000 முதல் 4000 பேரை பணியில் சேர்க்க இருப்பதாக கூறியுள்ளது. கொரோனா காலத்தில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டவை தங்கும் விடுதிகள். அப்போது சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெரும்பால பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. தற்போது பொருளாதார நிலைமை மீண்டு மக்கள் சுற்றுலா செல்வது ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்வது என்பது அதிகரித்துள்ளதால் மீண்டும் தங்குமிடங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
ஃபார்ச்சூன் ஹோட்டல்ஸின் மேலாண் இயக்குனரான சமீர் ,தங்களது நிறுவனத்தில் புதிதாக ஆட்களை பணியமர்த்துவது என்பது நடப்பாண்டில் 8 முதல் 10% வரை அதிகரிக்கும் எனக் கூறியுள்ளார். பார்ச்சூன் ஹோட்டல்ஸ் நிறுவனம் 56 நகரங்களில் தங்களுடைய தங்கும் விடுதிகளை அமைத்து செயல்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் பிரெண்ட் டெஸ்க், ஹவுஸ் கீப்பிங் .அட்மினிஸ்ட்ரேடிவ் உள்ளிட்ட பிரிவுகளுக்கு ஆட்களை தேர்வு செய்து வருகிறது.
எனவே இந்த துறையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பணி வாய்ப்புகள் அதிகரிக்கும் என மேன்பவர் குரூப் இந்தியா நிறுவனத்தின் அலோக்குமார் தெரிவித்துள்ளார். 2025ஆம் நிதியாண்டில் தங்கும் விடுதிகளை பொறுத்தவரை 7 -9 % வருவாய் வளர்ச்சி இருக்கும் என ஐசிஆர்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
உங்கள் ஸ்மார்ட்போன் பாதுகாப்பா இருக்கா..? இந்த நம்பரை பயன்படுத்தி நீங்களே செக் பண்ணலாம்..!!