முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

எலி மருந்து நெடி பரவி 2 குழந்தைகள் உயிரிழப்பு..? ICU-வில் தாய், தந்தைக்கு தீவிர சிகிச்சை..!! சென்னையில் சோகம்..!!

The death of 2 young children after inhaling the rat poison due to health problems has caused a great tragedy.
06:38 PM Nov 14, 2024 IST | Chella
Advertisement

சென்னை குன்றத்தூர் அருகே மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை ஸ்வாசித்ததால் உடல் நலக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மணஞ்சேரியைச் சேர்ந்த 34 வயது கிரிதரன் என்பவர் தனியார் வங்கியில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், இவரது மனைவி பவித்ராவுக்கும் விஷாலினி (6 வயது) மற்றும் சாய் சுதர்சன் (4 வயது) ஆகிய இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில், இவர்களது வீட்டில் அடிக்கடி எலி தொல்லை இருந்துள்ளது.

இதனால் அவர் எலி மருந்து, எலி பேஸ்ட் ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்தி வந்துள்ளார். இப்படி இருக்கையில், வீட்டில் எலி மருந்து வைத்த நிலையில் அந்த மருந்தின் நெடி வீடு முழுவதும் பரவியுள்ளது. இதைச் சுவாசித்த கிரிதரன் உட்பட அக்குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் சில மணி நேரங்களில் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, 4 பேரும் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், தற்போது கிரிதரனின் குழந்தைகளான ஷாலினி மற்றும் சுதர்சன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும், கிரிதரன் மற்றும் பவித்திரா இருவரும் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். வீட்டில் ஏ.சி உபயோகப்படுத்தியதால் எலியைப் பிடிக்க வைத்திருந்த மருந்தின் நெடி பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : மகளின் வளைகாப்புக்கு வந்த இடத்தில் இறுதிச் சடங்கில் பங்கேற்ற பெற்றோர்..!! காதல் கணவருடன் பைக்கில் சென்றபோது எமனாக மாறிய துப்பட்டா..!!

Tags :
2 குழந்தைகள்ChennaiPoliceஎலி மருந்து
Advertisement
Next Article