முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஒரே நாட்டில் 2.6 லட்சம் தீவுகள்!! ஆச்சரியங்கள் நிறைந்த நாடு எது தெரியுமா?

05:10 AM May 23, 2024 IST | Baskar
Advertisement

உலகில் அதிக தீவுகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் சுவீடன் முதல் இடத்தில் உள்ளது.

Advertisement

உலகில் மொத்தமாக 9 லட்ச தீவுகள் உள்ளன. இந்தியாவில் மட்டுமே வங்கக்கடல், அரபிக்கடல் மற்றும் நாட்டிற்குள் என மொத்தமாக 1,382 தீவுகள் உள்ளன. அவற்றில் வெகு சில தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வாழ்கிறார்கள். உலகில் அதிக தீவுகளைக் கொண்ட நாடுகளில் முதல் இடத்தில் இருக்கும் சுவீடன் 2,67,570 தீவுகளைக் கொண்டுள்ளது.

சுவீடன் நாடு வடதுருவத்திற்கு அருகில் இருக்கும் 2,67,570 தீவுக் கூட்டங்களைத் தன் எல்லைக்குள் வைத்துள்ளது. அவற்றில் 96,000 மட்டுமே பெயரிடப்பட்டுள்ளது மற்றும் 80,000 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். பால்டிக் கடலில் அமைந்துள்ள கோட்லேண்ட் தீவு தான் சுவிடனில் அமைந்துள்ள மிகப்பெரிய தீவு. மற்ற முக்கிய தீவுகள் ஸ்வீடனுடன் பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் அடுத்துள்ள நாட்டில் ஆர்க்டிக்கின் பனிப்பாறைகள் மற்றும் மலைகள் முதல் மிதமான பகுதிகளின் காடுகள் மற்றும் ஏரிகள் வரை பல்வேறு நிலப்பரப்புகளுக்கு தாயகமாக உள்ளது. நார்வே துருவ கரடிகள், வால்ரஸ்கள் மற்றும் கலைமான்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகளின் இருப்பிடமாகவும் இந்தத் தீவுகள் உள்ளன. மொத்தமாக நார்வேயில் 2.39,057 தீவுகள் உள்ளன. அவற்றில் 60,000 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர்.

மேலும் பின்லாந்து வளைகுடாவில் அமைந்துள்ள பின்லாந்து ப்ரோப்பர் மற்றும் பால்டிக் கடலில் அமைந்துள்ள ஆலண்ட் தீவுகள் ஆகியவை பிற முக்கிய தீவுகளாகும். கனடா உலகின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நாடுகளில் ஒன்றான கனடாவில் 50,000 தீவுகள் உள்ளன. அவற்றில் 52 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர்.ஸ்காண்டினேவியன் நாடுகளில் ஒன்றான பின்லாந்தில் மொத்தமாக 1,70,000 தீவுகள் உள்ளன. அவற்றில் 80,000 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். பின்லாந்தில் உள்ள தீவுகளில் மிகப்பெரிய தீவின் பெயர் ஆலண்ட் ஆகும். இது பின்லாந்தின் தன்னாட்சி பகுதியாக உள்ளது.கனடாவில் உள்ள தீவுகளில் ஆர்க்டிக் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள பாஃபின் தீவு மிகப்பெரிய தீவு ஆகும். மற்ற முக்கிய தீவுகளில் நியூஃபவுண்ட்லேண்ட், பிரின்ஸ் எட்வர்ட் தீவு மற்றும் வான்கூவர் தீவு ஆகியவை அடங்கும். தீவுகள் ஆர்க்டிக்கின் பனிப்பாறைகள் மற்றும் மலைகள் முதல் மிதமான பகுதிகளின் காடுகள் மற்றும் ஏரிகள் வரை பல்வேறு நிலப்பரப்புகளை வழங்குகின்றன.

அமெரிக்காவில் மொத்தமாக 18,000 தீவுகள் உள்ளன. அவற்றில் 50 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவுதான் மிகப்பெரிய தீவு. அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலமான அலாஸ்கா மற்றும் அமெரிக்காவின் இணைக்கப்படாத பிரதேசமான புவேர்ட்டோ ரிக்கோ ஆகியவை மற்ற முக்கிய தீவுகளில் அடங்கும். இந்தோனேசியாவில் மொத்தம் 17,508 தீவுகள் உள்ளன. இந்தோனேசியாவில் தீவுகளில் பல அழகான சுற்றுலாத் தலங்களாக விளங்குகின்றன. தீவுகள் கடற்கரைகள் மற்றும் மழைக்காடுகள் முதல் எரிமலைகள் மற்றும் பழங்கால கோவில்கள் வரை பல்வேறு சுற்றுலா இடங்களைக் கொண்டிருகின்றன.

ஆஸ்திரேலியாவில் மொத்தமாக 8,200 தீவுகள் உள்ளன. அவற்றில் 300 தீவுகளில் மட்டுமே வாழ்கின்றன. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய தீவின் பெயர் தாஸ்மேனியா ஆகும். மற்ற முக்கிய தீவுகளில் கங்காரு தீவு, ஃப்ரேசர் தீவு மற்றும் மெல்வில் தீவு ஆகியவை அடங்கும்.மற்றொரு தெற்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் 7,641 தீவுகள் உள்ளன. அவற்றில் 2,000 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். மணிலாவின் தலைநகரான லுசோன் தீவு மிகப்பெரிய தீவு ஆகும். மற்ற முக்கிய தீவுகளில் மிண்டானாவ், விசாயாஸ் மற்றும் பலவான் ஆகியவை அடங்கும்.தெற்கே கடற்கரைகள் மற்றும் மழைக்காடுகள் முதல் வடக்கின் மலைகள் மற்றும் எரிமலைகள் வரை பல்வேறு நிலபரப்புகளை கொண்டுள்ளது.

Read More: பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி!

Tags :
islandsSweden
Advertisement
Next Article