பெற்றோர்களே...! 1-ம் வகுப்பு முதல்... முற்றிலும் இலவசம்...! மிஸ் பண்ணிடாதீங்க..!
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் கல்வி பயில இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009இன் படி 2023-24ஆம் கல்வி ஆண்டில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் LKG வகுப்பிலும், 1-ம் வகுப்பு முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் மாணவர் சேர்க்கைக்கு 18-ம் தேதி வரை rte.tnschool.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மே 18-ம் வரை பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பம் சார்ந்த விவரங்களும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டடிருப்பின் அதற்கான காரணங்களும் இணையதளத்திலும், சம்மந்தப்பட்ட பள்ளித் தகவல் பலகையிலும் வெளியிடப்படும். குழந்தைகளின் விண்ணப்பங்கள் குலுக்கல் நடத்தாமல் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். அதேபோல, நலிந்த பிரிவினரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.
ஒருவேளை நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிடக் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் சம்மந்தப்பட்ட பள்ளியில் குலுக்கல் முறை நடத்தப்பட்டு சேர்க்கைக்கான குழந்தைகள் தேர்வு செய்யப்படுவார்கள். சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் விண்ணப்ப எண்ணுடண் இணைய தளத்திலும் சம்மந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும்.
ஒரு பெற்றோர் அதிகபட்சம் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். வருமானம், இருப்பிடம், சாதி சான்றிதழ்களை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளியில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால், வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.