முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அடடே.! பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் 19,484 சிறப்பு பேருந்துகள்.! அமைச்சரின் சூப்பரான அறிவிப்பு.!

05:03 PM Jan 08, 2024 IST | 1newsnationuser7
Advertisement

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வேலை பார்க்கும் தமிழகத்தின் மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு சிறப்பு பேருந்து வசதிகளை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

Advertisement

இதன் படி பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ஜனவரி 12 முதல் 14 தேதிகளில் தமிழகம் முழுவதிலும் 19,484 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருக்கிறார். சென்னையில் மட்டும் 11,006 பேர் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார்.

இந்தப் பேருந்துகள் பூந்தமல்லி தாம்பரம் . கோயம்பேடு கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் இருந்து செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பொங்கல் பண்டிகையை முடித்து ஊர் திரும்புவதற்கு வசதியாக 17,589 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார். பொங்கல் பண்டிகைக்கு ஊர் சென்று திரும்புபவர்கள் எந்தவித நெருக்கடியும் இன்றி பயணம் மேற்கொள்ள இந்த வசதிகளை அரசு செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Tags :
Pongal 2024Pongal Holidaysspecial busesTamilnaduTN Transportation
Advertisement
Next Article