19 வயது இளைஞன்... 20 நாட்களில் 2 திருமணம்.... உறவினர்கள் அதிர்ச்சி.....
பீகாரில் 19 வயது இளைஞன் 20 நாட்களில் 2 பெண்களை திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டம், அக்சரா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப் தந்தி. இவரது மகன் வினோத் குமார். இவருக்கு, நவ்கடிஹ் கிராமத்தைச் சேர்ந்த பிரீத்தி குமாரியுடன் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரீத்திக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், பிரீத்தி குமாரியும் வினோத்தைக் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வினோத் குமார் பிரீத்தியை சந்திக்கத் திட்டமிட்டு, கடந்த ஏப்ரல் 22ம் தேதி அன்று பிரீத்தியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, ஊர்மக்களிடம் வினோத் குமார் மாட்டிக் கொண்டார். இதனையடுத்து, இருவருக்கும் கிராமத்தில் இருக்கும் கோயிலில் திருமணம் செய்து வைத்தனர் ஊர்மக்கள்.
இதனையடுத்து, அக்சரா பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வினோத் குமார், பிரீத்தியை அழைத்து சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளான். டிஜே-வாக பணிபுரியும் வினோத் குமார், கிரிஜா குமாரி என்ற பெண்ணின் பாடல் பரிந்துரைகளை அடிக்கடி ஒலிபரப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், வினோத்குமாரிடம் மயங்கிய கிரிஜா குமாரி அவர் மீது காதல் வயப்பட்டுள்ளார். இந்நிலையில் கிரிஜாகுமாரி வீட்டிற்கு ரகசியமாக சென்ற வினோத்குமாரை, கிராமத்தினர் பிடித்து ஏற்கெனவே நடந்தது போல், கோயிலில் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தனர்.
தைரியமாக கிரிஜாவையும் வினோத் குமார் வீட்டிற்கு அழைத்து வந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பிரீத்திகுமாரி, வினோத் குமாரின் தில்லாலங்கடி வேலைக் குறித்து மலாய்பூர் காவல் நிலையத்திற்கு சென்று புகாரளித்தார். இதையடுத்து அனைவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 19 வயது இளைஞர் 20 நாட்களுக்குள் 2 பெண்களை திருமணம் செய்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காபியில் ப்ளிச்சிங் பவுடர்: கணவனை கொல்ல திட்டம் தீட்டிய மனைவி….