கர்ப்பிணி பெண்களுக்கு 18 ஆயிரம் உதவித் தொகை..!! எப்படி விண்ணப்பிப்பது? மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!!
தாய்-சேய் அடையாள எண் பெற கர்ப்பிணிகள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அப்படி அடையாள எண் பெற்றவர்கள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 18000 ரூபாயை தவணை முறையில் பெறவும் விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில் கோவை மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அருணா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "மகப்பேறு இறப்பு மற்றும் சிசு இறப்பு விகிதம் குறைக்கும் விதத்தில் கர்ப்பகால தொடர் கண்காணிப்பு செய்வதற்காக பிக்மி என்ற இணையதளத்தில் அனைத்து கர்ப்பிணிகளின் பெயரையும் பதிவு செய்கிறோம். இதற்காக 12 இலக்க தாய் -சேய் அடையாள எண் (ஆர்.சி.எச்.ஐ.டி.) வழங்கப்படுகிறது.
இதன் மூலம் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் சிகிச்சை மற்றும் கண்காணிப்பு செய்கிறார்கள். சுய கர்ப்ப பதிவு மூலம் கர்ப்பிணிகள் தங்களது விவரங்களைhttps://picme.tn.gov.in/ picme publicஎன்ற இணையத்தளத்தில் பதிவு செய்யலாம். ஆதார்அட்டை மற்றும் கர்ப்பத்தை உறுதி செய்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து அடையாள எண் பெறலாம்.
மேலும் டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு உதவி திட்டத்திற்கும் விண்ணப்பிக்கலாம். பதிவு செய்த கர்ப்பிணிக்கு முதல் தவணையாக கர்ப்பகாலத்தின் 4-வது மாதத்தில் ரூ.6 ஆயிரம், 2-ம் தவணையாக குழந்தை பிறந்த 4-வது மாதத்தில் ரூ.6 ஆயிரம், 3-ம் தவணையாக குழந்தையின் 9-வது மாதத்தில் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
மேலும் கர்ப்பகாலத்தில் 2 ஊட்டச்சத்து பெட்டகம் என ரூ.18 ஆயிரம் முதல் 2 குழந்தைகளுக்கு வழங்கப்படும். அந்த தொகை வங்கிசேமிப்பு கணக்கில் செலுத்தப்படும். கோவை மாவட்டத்தில் 89 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சுயகர்ப்ப பதிவு குறித்த வழிகாட்டுதல் நடைபெறும். இந்த சேவையை பயன்படுத்தி கர்ப்பிணிகள் பயன் பெறலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read more ; ஈரானில் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே யார்?