For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை - தேர்தல் நேரத்தில் அதிகரிக்கும் பதற்றம்!!

07:34 PM Apr 16, 2024 IST | Mari Thangam
18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை   தேர்தல் நேரத்தில் அதிகரிக்கும் பதற்றம்
Advertisement

சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 18 நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நக்சலைட்களின் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் ஏப்ரல் 19ம் தேதி ஒரு தொகுதிக்கும், ஏப்ரல் 26ம் தேதி 3 தொகுதிகளுக்கும், மே 7ஆம் தேதி 7 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதோடு, துணை ராணுவப் படை, எல்லை பாதுகாப்பு படை, மாவட்ட ரிசர்வ் பாதுகாப்பு படை உள்ளிட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சத்தீஸ்கரின் கான்கெர் மாவட்டத்தின் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இச்சம்வத்தில் 18 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில், சங்கர் ராவ் என்ற அந்த அமைப்பின் முக்கிய தலைவனும், போலீசாரால் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பல நக்சலைட்களும் கொல்லப்பட்டனர். தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இன்னும், பல நக்சலைட்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக்கூறியுள்ள பாதுகாப்பு படையினர், பலி எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும், இந்த என்கவுண்டரில் இதுவரை 3 போலீஸாரும் படுகாயம் அடைந்திருப்பதாக தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, மாவோஸ்ட்டுகளிடம் இருந்து நான்கு ஏ.கே.47 ரக துப்பாக்கிகளையும் இதர பயங்கரமான ஆயுதங்களையும் எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement