டெல்டா உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பொளந்து கட்டப்போகுது கனமழை..!! எங்கெங்கு தெரியுமா..?
டெல்டா உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 15) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென் மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல், லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலும், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
இதன் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு, தேனி ஆகிய 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 21ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More : புற்றுநோயை உண்டாக்கும் உப்பு..!! அதிகளவு சேர்த்துக் கொண்டால் ஆப்பு..!! ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்..!!