"உலகையே உலுக்கிய சம்பவம்…" டொனால்ட் ட்ரம்பால் பலியான 17,000 உயிர்கள்.! வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்.!
அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பரிந்துரைத்த மருந்து உலகம் முழுவதிலும் 17,000 பேரின் இறப்பிற்கு காரணமாகி இருக்கிறது என்று அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அவர் பரிந்துரைத்த மருந்தை எடுத்துக்கொண்ட ஆறு நாடுகளைச் சேர்ந்த 17,000 பேர் உயிரிழந்துள்ளார் எனவும் பிரான்சில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபராக பதவி வகித்தவர் டொனால்ட் ட்ரம்ப். இவர் 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக பதவி வகித்து வந்தார். இவரது பதவி காலத்தில் உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்றால் பல கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். 2020 ஆம் ஆண்டில் கொரோனா பெரும் தொற்றினால் உலகமே முடங்கியது. இந்த நேரத்தில் 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள ஹைட்ராக்ஸி குளோரோகுயின்(HCQ) என்ற மலேரியா எதிர்ப்பு மருந்தை மக்கள் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார் ட்ரம்ப்.
மேலும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு நிர்வாகமும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது என தகவல் வெளியிட்டதோடு அந்த மருந்தை பயன்படுத்துமாறு மக்களை அறிவுறுத்தினார் .ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை மிராக்கில் மருந்து எனக் கூறி வந்தார் டொனால்ட் ட்ரம்ப். மேலும் 2020 ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி இந்த மருந்தை கொரோனா தொட்டிற்கு எதிராக அனைவரும் பயன்படுத்துமாறு தனது சமூக வலைதளத்தின் மூலம் அனைவரையும் கேட்டுக் கொண்டார். எனினும் 2020 ஆம் வருடம் ஜூன் மாதம் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் கொரோனாவிற்கு எதிராக இந்த மருந்தை பயன்படுத்துவதை தடை செய்தது.
இந்நிலையில் இந்த மருந்தை பயன்படுத்தியதால் ஆறு நாடுகளில் 17 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டு இருக்கும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது. கொரோனாவின் முதல் அலை உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் அந்த நோயின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாப்பதற்காக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்தியவர்களில் 17,000 பேர் உயிரிழந்ததாக ஆராய்ச்சியாளர்கள் அறிக்கையில் வெளியிட்டுள்ளனர். மேலும் அமெரிக்கா பிரான்ஸ் இத்தாலி பெல்ஜியம் துருக்கி மற்றும் ஸ்பெயின் நாட்டைச் சார்ந்தவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதில் அதிகபட்சமாக அமெரிக்காவைச் சார்ந்த 12,000 பேர் உயிரிழந்ததாகவும் அவர்களது ஆய்வு தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஸ்பெயின் நாட்டில் 1985 பேர் உயிரிழந்ததாகவும் இதற்கு அடுத்த இடத்தில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த 1822 வேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர்களது மருத்துவ அறிக்கையை பரிசோதனை செய்ததில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்தியது அவர்களது இறப்பிற்கு ஒரு காரணமாக இருந்திருக்கிறது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பெரும் தொற்று முடிந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி இருப்பது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.