17 ஆப்களுக்கு ஆப்படித்த கூகுள்.! தடை செய்ய காரணம் இதுதான்.!
இன்றைய டிஜிட்டல் உலகில் மூன்று பில்லியன் பயனாளர்களுடன் மிகப்பெரிய ஆபரேட்டிங் சிஸ்டமாக விளங்கி வருவது ஆண்ட்ராய்டு. இந்த ஆண்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம்களில் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்வதற்கு கூகுள் பிளே ஸ்டோர் பயன்படுத்தப்படுகிறது. இந்த கூகுள் பிளே ஸ்டோர் 17 செயலிகளை அதிரடியாக அதன் ஸ்டோரில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்திருப்பது ஆண்ட்ராய்டு பயனர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கணினி நிபுணர்களால் ஸ்பைலோன் என அழைக்கப்படும் 17 செயலிகளை கூகுள் தனது ஸ்டோரிலிருந்து அதிரடியாக நீக்கி இருக்கிறது. இவை பயனர்களுக்கு கடன் உதவி செய்வது போல் நடித்து அவர்களது தரவுகளை செல்போன்களில் இருந்து திருடி அதன் மூலம் மிரட்டி அதிக வட்டிக்கு கடனை திருப்பி செலுத்த வைத்துள்ளனர். இந்த மோசடி அப்ளிகேஷன்களின் நெருக்கடியால் பல இளைஞர்கள் தற்கொலை செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இவை கடன் பெறும் நபர்களின் அந்தரங்க தகவல்களை அவர்களது செல்போனில் இருந்து திருடி அதன் மூலம் அவர்களை மிரட்டி பணிய வைத்திருக்கிறார்கள். ஏஏ, கிரெடிட், அமார், கேஷ், பிளாஷ் லோன் போன்ற நிறுவனங்கள் இதில் அடங்கும். இஎஸ்இடி ஆராய்ச்சியின் மூலம் பயனர்களின் பிரைவசி பாதுகாப்பதற்காக கூகுள் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.