முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Good News: வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு...! மத்திய அரசு ஒப்புதல்...!

09:10 AM Mar 09, 2024 IST | 1newsnationuser2
Advertisement

வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல்.

வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல். ஊதிய உயர்வு தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்புகளுடன் ஒப்பந்தம் கையெழுத்து. 2022 நவம்பர் மாதம் முதல் முன்தேதியிட்டு ஊதிய உயர்வு அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பொதுத்துறை வங்கிகளுக்கு ஆண்டுக்கு ரூ.8,254 கோடி செலவாகும். நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் ஆகியவற்றின் கூடுதல் தவணையை 1.1.2024 முதல் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் தற்போதுள்ள 46 சதவீதத்தை விட 4 சதவீதம் அதிகமாகும்.

அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டின் காரணமாக அரசுக்கு ஏற்படும் ஒட்டுமொத்தச் செலவு ஆண்டுக்கு 12,868.72 கோடி ரூபாயாக இருக்கும். இதன் மூலம் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement
Next Article