15 வயதில் 17 கொலைகள்..!! மூளையை ஆய்வுக்கு உட்படுத்தவும் ஒப்புதல்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!
பிப்ரவரி 14, 2018 அன்று அமெரிக்காவின் பார்க்லேண்டில் உள்ள மார்ஜோரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர் நிலைப்பள்ளியில் மாணவர்கள், ஊழியர்கள் என மொத்தம் 17 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் உலகளவில் பேசுபொருளானது. மேலும், இந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது 15 வயது சிறுவன் நிகோலஸ் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் சார்பில் வழக்கறிஞர் அலெக்ஸ் அரேசா, இந்த வழக்கை நடத்தி வருகிறார். நீதிமன்றத்தில் நிகோலஸ் குரூஸ் மூளையை ஆய்வு செய்ய வேண்டும் என மனுதாக்கல் செய்தார். இது தொடர்பாக அவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த தகவலின்படி, ”விஞ்ஞானிகள் நிகோலஸ் குரூஸ் மூளையை ஆய்வு செய்தால், இந்த அரக்க குணத்தை உருவாக்கியது என்ன என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியும் என்று நினைத்தேன். எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருக்க சில வகையான முயற்சிகளை மேற்கொள்ள இந்த ஆய்வு உதவலாம். மேலும், இது இதற்கு முன்னால் யாரும் முயற்சிக்காதது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், நிகோலஸ் குரூஸின் பெயர், புகைப்படம், அவர் தொடர்பான திரைப்படங்கள், புத்தகம் என எதையும் முன் அனுமதி இல்லாமல் வெளியிடக் கூடாது எனவும், இதற்கு அனுமதி பெற வேண்டும் எனவும் நிகோலஸின் பெற்றோரிடம் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. முன் அனுமதி இல்லாமல் நிகோலஸ் குரூஸ் தொடர்பாக வெளியிடப்படும் தகவல்கல் தேவையில்லாமல் நிகோலஸ் குரூஸின் குடும்பத்தாரை வேதனைப்படுத்தும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்தான், நிகோலஸ் குரூஸின் மூளை ஆய்வு தொடர்பாக ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் நிகோலஸ் குரூஸிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர், மருத்துவ ஆய்வுக்காக மூளை தானம் செய்வதற்கு சம்மதிப்பதாக தெரிவித்திருக்கிறார் எனக் தகவல் வெளியாகியுள்ளது.
Read More : மக்களே..!! இந்த மெசேஜ் வந்தால் உஷாரா இருங்க..!! தெரியாமல் கூட இந்த தவறை பண்ணிடாதீங்க..!!