For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

16-வது நிதிக்குழு அதன் விதிமுறைகள் தொடர்பான கருத்துக்கள் வரவேற்பு...!

06:50 AM May 09, 2024 IST | Vignesh
16 வது நிதிக்குழு அதன் விதிமுறைகள் தொடர்பான கருத்துக்கள் வரவேற்பு
Advertisement

பதினாறாவது நிதிக்குழு அதன் விதிமுறைகள் தொடர்பான விவகாரங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.

பதினாறாவது நிதி ஆணையம் விதிமுறைகள், பின்பற்றக்கூடிய பொதுவான அணுகுமுறை குறித்து பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து பரிந்துரைகள் / கருத்துக்களை வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பதினாறாவது நிதிக்குழுவின் பணி தொடர்பான வேறு எந்த விவகாரம் குறித்தும் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

Advertisement

தங்களது ஆலோசனைகளை 16-வது நிதிக்குழுவின் https://fincomindia.nic.in/portal/feedback இணையதளம் மூலம் 'ஆலோசனைகளுக்கான அழைப்பு' என்ற பிரிவின் கீழ் சமர்ப்பிக்கலாம். 16-வது நிதிக்குழு இந்திய அரசியலமைப்பின் விதிகளின்படி டாக்டர் அரவிந்த் பனகாரியாவைத் தலைவராகக் கொண்டு குடியரசுத் தலைவரால் 2023 டிசம்பர் 31 அன்று அமைக்கப்பட்டது. 2026 ஏப்ரல் 01-ம் தேதி தொடங்கி ஐந்து வருட காலப்பகுதியை உள்ளடக்கிய பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்று பதினாறாவது நிதிக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement