முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஏப்ரல் 16ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

10:56 AM Apr 13, 2024 IST | Chella
Advertisement

திருச்சியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் பொதுவாக வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை தவிர பிரசித்தி பெற்ற கோவில்களில் நடைபெறும் திருவிழா காரணங்களாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், திருச்சி மாவட்டம் உலகப் புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அன்று அனைத்து மக்களும் பங்கேற்கும் விதமாக மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு ஜூன் 8ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இந்த கோயிலின் சித்திரை பெருந்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஏப்ரல் 15ஆம் தேதி வெள்ளிக் குதிரை வாகனத்தில் சாமி வலம் வருவர்.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 17ஆம் தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும், ஏப்ரல் 18ஆம் தேதி முத்து பல்லாக்கும், ஏப்ரல் 19ஆம் தேதி தெப்ப உச்சமும் நடைபெறும். ஏப்ரல் 23ஆம் தேதி தங்க கமல வாகனத்தில் திரு வீதி உலா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூட்டம் இருப்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Read More : ”ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பியதே செல்வகணபதி தான்”..!! எடப்பாடி பழனிசாமி ஒரே போடு..!!

Advertisement
Next Article