முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழகமே...! 1,69,564 புதிய வேளாண் மின் இணைப்புகள்... அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்...!

1,69,564 new agricultural power connections... Minister Senthil Balaji informed
06:06 AM Nov 29, 2024 IST | Vignesh
Advertisement

மூன்றாண்டு காலத்தில் 1,69,564 புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. ஆட்சியில் முந்தைய ஐந்தாண்டுகளில் வழங்கப்பட்ட மின் இணைப்புகள் 1,38,592 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட இந்தியாவிலேயே முதன் முறையாக 1989-1990 ஆண்டில் உழவர்களுக்கு இலவச மின்சாரத் திட்டத்தைத் தொடங்கி வைத்தவர் கலைஞர் தொலைநோக்குப் பார்வையில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தால் தமிழ்நாட்டின் கிராமங்கள் துரித வளர்ச்சியை அடைந்தன. விவசாய நிலப்பரப்பு விரிவடைந்தது. விவசாயிகள் தன்னிறைவு பெற்றனர்.

2010-2011ஆம் ஆண்டு காலத்தில் ஒரே ஆண்டில் 77,158 இலவச வேளாண் மின் இணைப்புகளைக் கொடுத்துச் சாதனை படைத்தார் கலைஞர் அவர்கள் அந்தச் சாதனைகளின் அடிச்சுவட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 1,69,564 புதிய வேளாண் மின் இணைப்புகளைக் கொடுத்துப் புதிய சரித்திரம் படைத்திருக்கிறது. அதற்காக மின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2016-2021 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் உழவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த வேளாண் மின் இணைப்புகளின் எண்ணிக்கை 1,38,592 மட்டுமே. ஆனால், திராவிட மாடல் ஆட்சியில் மூன்றே ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையைக் கடந்து 1,69,564 புதிய மின் இணைப்புகளை வழங்கி சாதனை புரிந்துள்ளது. வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காக திட்டங்களைத் தீட்டி அக்கறையோடு செயலாற்றி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைகளால் வேளாண் மின் இணைப்புகளின் எண்ணிக்கை இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது. இதனால், 3,38,380 ஏக்கர் வேளாண் நிலங்கள் பாசன வசதியைப் பெற்றிருக்கின்றன என தெரிவித்துள்ளார்.

Tags :
Dmkmk stalinSenthil Balajitn government
Advertisement
Next Article